பா.ம.க. தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வரமுடியவில்லை; அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!
சென்னையில் நடந்த பொதுக்குழு
கூட்டத்தில் பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசுகையில்,
நாம் மக்கள் மனதில் வெற்றி பெற்றுள்ளோம். அதேநேரம் அரசியல் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். 56 ஆண்டுகள் ஆட்சி செய்யும் இரண்டு கட்சிகளை விட அதிக தகுதி, திறமை கொண்ட கட்சியாக பா.ம.க உள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 44 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வருகிறார். சமீபத்தில், மத்திய அரசு பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், 85 வயதில் பல்வேறு சாதனைகளை செய்த நிறுவன தலைவர் ராமதாசுக்கு வழங்கவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
பா.ம.க. தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது மாற வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டு நம்முடைய ஆண்டு. நாம் ஆளும் ஆண்டு. அதற்கு முன்னோட்டம்தான் 2024 நாடாளுமன்ற தேர்தல். இதில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றார்.