ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும்; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகத் தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ரா.தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக்கூறினோம். முதல்வர் எங் கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். குறிப்பாக, ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களைப் பிரித்தாளும் வகையில் அரசாணை 243-ஐ கொண்டு வந்துள்ளனர். இது கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், 243 அரசாணையை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைகளைய வேண்டும்.மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிட்டோ ஜாக் சார்பில் இன்று சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்கவுள்ளனர் என்று அவர் கூறினார்.