பள்ளி, கல்லூரி தோர்வுகள் தொடக்கம்; தடையில்லா மின்சாரம் விநியோகிக்க உத்தரவு…!

பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சாரவாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசரகாலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தக் கூடாது என மின்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மின் தொடர்பான புகார் களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 9498794987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதி வேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்ம் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ள தாக மின் வாரிய அதிகாரி தெரிவித்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial