திருப்பதி ஏழுமலையானை விஐபி பிரேக் தரிசனம் செய்த அமைச்சர்…?
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு தரிசனம் தொடங்கியது. கடந்த 24 -ம் தேதி துவாதசி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த வைகுண்ட தரிசனம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியான இன்று வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தமிழக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குடும்பத்துடன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை திருப்பதி கோவிலில் வழிபட்டார். தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் திறக்கப்பட்டிருக்கும் சொர்க்கவாசலில் பிரவேசம் செய்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்து தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.