அரசு விருது பெற்ற மாணவிக்கு வரவேற்பு!

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் மாணவி சுகித்தா. 10-ம் வகுப்பு படித்து வரும் இவர் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, தனது சேமிப்பில் இருந்து சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்வதுடன், ஏழை மாணவ-மாணவிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தார். மேலும், இவர் பாரம்பரிய மற்றும் கிராமப்புற கலைகளை மீட்டெடுக்கும் விதமாக தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார். மாணவி சுகித்தாவின் செயல்பாடுகள் மற்றும் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் விருது வழங்கப்பட்டு, ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான விருதை பெற்று ரெயில் மூலம் திருச்சி வந்த மாணவி சுகித்தாவுக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளிகல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர், உலக சிலம்ப இளையோர் சம்மேளன நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *