மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் நிறுவனரின் 93 வது பிறந்த நாள் கலைத் திருவிழா போட்டிகள்
மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் நிறுவனரின் 93 வது பிறந்த நாள் கலைத் திருவிழா போட்டிகள்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம், ஆர். 93 வது பிறந்த நாள், கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான குழு நடனம், தனி நடனம் குழு பாடல், தனிப் பாடல் நாடகம், மாறுவேட போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன், இயக்குனர் முனைவர் இரா.இராஜமாணிக்கம், ஆலோசகர்கள்,முதல்வர் எஸ்.சேகர் மற்றும் துணை முதல்வர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்து போட்டியினை துவங்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து போட்டிகள் 6,7,8 ஆம் வகுப்பு மற்றும் 9,10 ஆம் வகுப்பு மற்றும் 11,12 ஆம் வகுப்பு ஆகிய நிலைகளின் அடிப்படையில் தனித்தனி பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் 6,7,8 – 9,10- 11,12 ஆகிய வகுப்புகள் என தனித்தனியே முதல் பரிசு ரூபாய் 1000, இரண்டாம் பரிசு ரூபாய் 750, மூன்றாம் பரிசு ரூபாய் 500 என பரிசுகள் தனித்தனி பிரிவாக வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர், இயக்குனர், ஆலோசகர், முதல்வர் ஆகியோர் பரிசுத்தொகை, அன்பளிப்புகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் போட்டிகளை பேராசிரியர்கள் ஷிபிலா, தங்கபாலு, ராஜேஷ் கண்ணன்
சாந்திபிரியா,
சுகுணா , கனிமொழி, செல்வகுமாரி, சங்கீதா,சிவரஞ்சனி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை சிறப்பாக நடத்திக்கொடுத்தனர்.
காட்சித் தொடர்பியல் துறை தலைவர் பேராசிரியர் சிலம்பரசன் மற்றும் நவநாகரிக ஆடை வடிவமைப்பு துறை தலைவர் வெங்கடேஷன் மற்றும் பேராசிரியர் சரோஜினி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
அனைவருக்கும் எம். ஆர் கல்லூரியின் தாளாளர் எம். ஆர்.இரகுநாதன் நன்றி தெரிவித்தார்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வேல்முருகன்