பெரும்பாணாற்றுப்படையில் சாத்து வணிகம் பற்றி சில முக்கிய குறிப்புகள் வருகின்றன. வரலாற்று ஆய்வு

பெரும்பாணாற்றுப்படையில் சாத்து வணிகம் பற்றி சில முக்கிய குறிப்புகள் வருகின்றன. சாத்து என்ற சொல்லுக்கு நிலவழி வணிகம் என்று பொருள் வடமொழியில் சார்த்தவாஹா என்றும் இது அழைக்கப்படுகின்றது.

 

Support us by Keep Sharing the post, and Buy History Related Books from us.

 

பண்டைக் காலத்தில் வணிகம் இரண்டு வகை நடைப்பெற்றது. ஒன்று நிலவழியில் மற்றொன்று கடல் வழியில். கடல் வழியில் நடைபெற்ற வணிகத்துக்கு முந்நீர் வழக்கம் என்றும் ஒரு அடைமொழி பெயர் உள்ளது. முந்நீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருந்தாலும், தென்னகத்தை சுற்றி இருக்கும் மூன்று கடல் என்ற பொருளும் அல்லது மூன்று வழிகளில் உருவான நீரால் உருவான கடலில் நடைபெறும் வணிகம் என்றும் சிலர் பொருள் பொருள் கூறுகின்றர்.

 

இந்திய நிலப்பரப்பு முழுவதும் நடைபெற்ற உள்நாட்டு வணிகமானது தரைவழி வழியும் வாணிகத்தையே மிகவும் நம்பியிருந்தது. சில நேரங்களில் குஜராத் பகுதியிலிருந்து தென்னகத்திற்கும் கப்பல் வழியாகவும் வணிகங்கள் நடைபெற்றதாக இலக்கிய வரலாற்று தகவல்கள் நமக்கு கூறுகின்றன.

இந்த சாத்து வணிகர்கள் தங்களின் வணிக பொருட்களை எடுத்துச் செல்லும் வழிகளுக்கு பெரு வழிகள் என்று பெயரிட்டனர். பெருவழிகள் பெரும்பாலும் வணிக பொருட்களை ஏற்றிச் செல்லும்.சாத்து வணிகர்கள் பயன்படுத்திய வணிக பாதையே ஆகும். இவை பல நாடு நகரங்களை இணைத்து பல நாடுகளைக் கடந்துசெல்லும் ஒரு முக்கிய பாதையாக உள்ளது இந்த சாத்து பாதையில் பல இடங்களில் வணிக வீரர்கள் காவல் புரிந்தனர்.

சாத்து வணிகத்தை மேற்கொள்ளும் வீர வணிகர்கள் தரைவழி வணிகர்களும் தங்களோடு மற்ற பிரிவு பாதுகாப்பு வீரர்களை கூடிச் சென்றனர். அவர்கள் ‘வணிகச் சாத்துக்கள்’ எனவும் அழைக்கப்பட்டனர்.

 

‘உன்னியது முடிக்கும் ஒண்டிறல் வீரர் பன்னிரு தரத்துப் பணி செய் மக்களாய்க்’ கொண்டாடப்படும் அவ்வீரர்கள் தொடர்பான கல்வெட்டுகளும் தமிழ்நாட்டில் சில இடங்களில் கிடைத்துள்ளன.

சிராப்பள்ளியில் சிங்களாந்தகபுரம், தாத்தையங்கார் பேட்டை ஆகிய ஊர்களில் கிடைத்துள்ள வீரதாவளக் கல்வெட்டுகள் சிறப்பானவை. வணிகர்களைக் காக்க, எதிர்த்தாருடன் போரிட்டு உயிரிழந்த வீரர்களைச் சிறப்பிக்கும் விதமாக அந்நிகழ்வு நடந்த இடங்களோ, அவற்றுக்கு அருகிலிருந்த வணிக நிலைகளோ எறிவீரப்பட்டினமாக அடையாளப்படுத்தப்பட்டன. இந்த எறிவீரப்பட்டினச் சிறப்பை வீரர்களுக்கு வழங்கிய வணிகக்குழுவினர் வளஞ்சியர்களாவர்.

தொண்டைமான், இளந்திரையன் வணிகத்தை ஊக்குவித்தது பற்றி பெரும்பாணாற்றுப்படை பெரிதும் வியந்து பேசுகிறது. அவனது ஆட்சியில் வழிப்போக்கர்களை தாக்கி பொருட்களைக் கவரும் திருடர்கள் இல்லை எனவும், மேலும் வழிப்போக்கர்களை தாக்கும் காட்டு விலங்குக்கும் பாம்புகளும் கூட அந்த பாதையில் இல்லை என்பதை பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

 

உப்பு வணிகம் செய்த உமணர்கள் தங்கள் வண்டிகளை ஏற்றிக்கொண்டு சென்றதைப் பற்றி விரிவாக இப்பாடல் கூறுகின்றது. உமனர்களின் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையா சென்றது எனவும், அதனை தொகுத்து யானைகள் இழுத்துச் சென்றன எனவும் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. சாத்து வணிகர்களின் வண்டியானது அரை வட்ட வடிவில் கூடாரம் அமைத்து இருந்தது எனவும் அதன் மேல் கோழியின் குடும்பங்கள் வசித்தது எனவும் கூறுகின்றது. இந்த அரை வட்ட வடிவ என்பதை வில்லு வண்டிக்கு நாம் ஒப்பிடலாம்.

 

உமணப் பெண்கள் வண்டியின்மேல் உட்கார்ந்துகொண்டு காளைகளை முடுக்கி வண்டியை ஓட்டினர். அவர்கள் தம் குழந்தைகளைக் காடித்துணித் தூக்குக் கயிற்று ஏணையில் தாங்கிக் கொண்டிருந்தனர். வண்டியின் நுக மையம் கயிற்றால் கட்டப்பட்டுப் பல ஆண்யானை ஒழுகையுடன் பிணிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டும் பக்கத்தில் நடந்துகொண்டும் உமணர்கள் யானைகளை ஓட்டினர். உமணர்கள் வேப்பந் தழைகளைக் கோத்துக் கட்டிய மாலைகளைத் தோள்களில் அணிந்திருந்தனர்.

 

மேலும். தொண்டைமான் இளந்திரையன் கழுதைகள், எருதுகள் யானைகள் உதவி மூலம் செல்லும் சாத்து வணிகர்களையும் காப்பதற்காக மீளி என்ற காவலர்களை நிறுத்தினான் என கூறப்படுகின்றது. இவன் பெரு வழிப்பாதையில் செல்லும் வழிப் போக். வியாபாரிகளுக்கு உதவும் காவல்காரன் என கூறப்படுகின்றது. அவனும் அவனது மார்பில். அம்புகளால் துளைக்கப்பட்ட வடு இருந்தது எனவும் திருடர்களை மிரட்டும்படி கைகளில் வில்லும் வாளும் இருந்தது எனவும் கூறப்படுகின்றது.

 

மேலும் இந்த சாத்து வணிகர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் சுங்க வரியை வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் இருந்தன. சுங்க வரியானது பண்டைய இலக்கியங்களில் உல்கு என அழைக்கப்படுகின்றது. எனவே அந்த சுங்கச்சாவடிகள் உல்குடைப் பெருவழி என அழைக்கப்பட்டன.

“முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்,வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி”

பெரும்பாணாற்றுபாடலில், இந்த பெரு வழிகள் கூடும் இடங்களில் வணிகரிடம் சுங்கவரி வாங்கப்பட்டது. அகன்ற காட்டுப்பாதை வழியின் குறுக்கே வில்மரத்தால் தடுத்து உல்கு வாங்கினர். சாத்து வணிகத்திற்கு வரும் புதிய வழிப் போக்கர்களுக்கு உதவுவர்.

 

சாத்து வணிகத்தின் தலைவன் மாசாத்துவான் என அழைக்கப்பட்டான். இவன் மன்னனுக்கு நிகராகவும் கருதப்பட்டான்.

 

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கோவலனின் தந்தை இந்த சாத்து வணிகத்தின் தலைவனான மாசாத்துவான் என்று குறிப்பிடப்படுகின்றார். இந்த இந்திய நிலப்பரப்பு முழுவதும் இருந்த வணிகத்தை உயிர்ப்போடு வைத்திருந்தவர்களில் சாத்து வணிகர்களும் ஒரு முக்கிய பங்கு வகித்தனர்.

தகவல், தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial