தமிழர் நீதி கட்சியின் தலைவர் சுபா இளவரசனின் அண்ணன் சுபா கிருஷ்ணமூர்த்தி மறைவினை அடுத்து அவரது இல்லத்தில் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழர் நீதி கட்சியின் தலைவர் சுபா இளவரசனின் அண்ணன் சுபா கிருஷ்ணமூர்த்தி மறைவினை அடுத்து அவரது இல்லத்தில் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த கு.வல்லம் கிராமத்தில் தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் நிறுவனர் செந்தமிழ் போராளி சுபா இளவரசனின் அண்ணன் சுபா கிருட்ணமூர்த்தி கடந்த 29.09.2023 இல் மறைந்ததை அடுத்து நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, சுபா இளவரசன் தலைமையில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் புலவர் காசிநாதன் அண்ணாரது திருவுருவ படத்தினை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார், தமிழரசு கட்சி தலைவர் கண்ணதாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அரியலூர் கோ கருணாகரன், வழக்கறிஞர் சௌந்தர்ராஜன், புலவர் மணிவண்ணன் முன்னிலையில் வகித்தனர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோபாலகிருட்டிணன், அரியலூர் தமிழ்களம் புலவர் அரங்கநாதன், மாநில துணைத்தலைவர் தங்க தமிழன், ஏர் உழவர் சங்க தலைவர் நல்லாசிரியர் ஆசைத்தம்பி, பாடகர் அறிவு மலை, தமிழர் நீதிக் கட்சி மாவட்ட செயலாளர் ரத்தின உமாசங்கர் நினைவேந்தல் உரையாற்றினார்கள், சுபா கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையினை திரைப்பட பின்னணி பாடகர் கருங்குயில் கணேஷ் தொடங்கி வைத்தார் . அறக்கட்டளையின் சார்பாக வல்லம் நடுநிலைப் பள்ளிக்கு கணினி வழங்கப்பட்டது, இதனை பள்ளி தலைமை ஆசிரியர் இளமாறன் பெற்றுக் கொண்டார். சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அண்ணாரது திருவருட படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்..
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் வேல்முருகன்