ஜெயங்கொண்டம் அருகே சிலால் எதிர்நீச்சல் பெண்கள் கபடி குழு நடத்திய மாபெரும் கபடி போட்டி பெண்கள் மற்றும் ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் அருகே சிலால் எதிர்நீச்சல் பெண்கள் கபடி குழு நடத்திய மாபெரும் கபடி போட்டி பெண்கள் மற்றும் ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது.
17.08.2023, ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் எதிர்நீச்சல் பெண்கள் கபடி குழு நடத்திய மாபெரும் கபடி போட்டி பெண்கள் மற்றும் ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் பல மாவட்டங்களை சார்ந்த 45 அணிகள் பங்கேற்றது முதல் பரிசு எதிர்நீச்சல் (EN Sports) ஜெயங்கொண்டம் அணியினரும் இரண்டாம் பரிசு திருமானூர் அணியினரும் மூன்றாம் பரிசு அழிசுகுடி அணியினரும் நான்காம் பரிசு திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி அணியினரும் பெற்றனர் பெண்கள் பிரிவில் பல மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகள் வந்திருந்தனர்.
அதில் 31 அணிகள் பங்கேற்றது முதல் பரிசு திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி அணியினரும் இரண்டாம் பரிசு ஜமால் முகமது கல்லூரி அணியினரும் மூன்றாம் பரிசு ஏவிஎஸ் கல்லூரி சேலம் அணியினரும் நான்காம் பரிசு பாரதி திருநெல்வேலி அணியினரும் பெற்றனர் இந்த கபடி போட்டியினை சிலால் எதிர்நீச்சல் அணி பயிற்சியாளர் கண்ணன் அவர்கள் விழாவினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் D வேல்முருகன்
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்