இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு ஆணைப்படி காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படும் விழாவினை ஜெயங்கொண்டம் வட்டாரக்கல்வி அலுவலர் ராசாத்தி தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கையன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெயந்தி வார்டு உறுப்பினர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஓவிய போட்டி கவிதை போட்டி பாட்டு போட்டி கட்டுரை போட்டி ஆகியன நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி மற்றும் அனைவரும் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மாணவர்களை வாழ்த்தி பேசினார். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.நிகழ்வில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஆகிய கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் சிவகுமார் மோகன்தாஸ் சாந்தி உமாமகேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள் பட்டதாரி ஆசிரியர் சந்திரகுமார் நன்றி கூறினார்.