மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில். கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, ஆண்டிமடம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆண்டிமடம் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு வரை ஊர்வலமாக சென்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.மேலும் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு மாணவர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவும் வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட செயலாளர், ஆண்டிமடம் ஒன்றிய தலைமை பொருப்பாளர்கள் , நிர்வாகிகள், மகளிர் அணியை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.