வடலூர் அருகே கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே என்எல்சி ஊழியர் பலி

வடலூர் அருகே கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே என்எல்சி ஊழியர் பலி

கடலூர், மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த என் எல் சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, நெய்வேலி வட்டம் 11. தாங்கி சாலையில் வசிக்கும் கோபால் மகன் சத்தியபால் (57)

இவர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சுரங்கம் 1ல் எப்எம்யார்டில் நிரந்தர தொழிலாளியாகபணிபுரிந்து வருகிறார், இவர் வடலூர் ராகவேந்திரா சிட்டி பகுதியில் புதியதாக வீடு கட்டும் பணி நடைபெறுவதை பார்த்துவிட்டு, மீண்டும் தனது நெய்வேலி வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பி வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி சாலையில் திரும்ப முற்பட்ட போது எதிரே, பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி வந்த கார் மோதியதில் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே சத்தியபால் உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சத்தியபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial