அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தில் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.
அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தில் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் இலையூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மகா காளியம்மன் கருப்பசாமிஆகிய தெய்வங்களுக்கு திருக்கோயில் புனராவர்த்தன ஜீரணோத்தாரன நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் முதற்கால யாக பூஜையாக விநாயகர் வழிபாடு புண்ணியாவாஜனம் வாஸ்து சாந்தி பிரவேச பலி புற்றுமண் எடுத்தல் அங்கரார்ப்பணம் ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் இரண்டாம்கால யாக பூஜையாக விநாயகர் வழிபாடு சூரிய சந்திர பூஜை கோ பூஜை மூல மந்திர ஹோமம் வேதிகா அர்ச்சனை முடித்து தீப ஆராதனை செய்து அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது .
இதில் ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மகா காளியம்மன் கருப்பசாமிஆகிய தெய்வங்களின் அருளாசி பெற்று சென்றனர்.இதில் பக்தர்களுக்கு பல்வேறு அன்ன வகைகள் தானமாக வழங்கப்பட்டன.