குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி வழக்கறிஞர் பலி….
கடலூர் மாவட்டம்,
குள்ளஞ்சாவடி அருகே நேற்று மாலை கிணற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி வழக்கறிஞர் உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் குணசீலன் (32 வயது)
இவர் கடலூர், நெய்வேலி நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் வி.சி.க.வில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில்
நேற்று மாலை வழக்கறிஞர் குணசீலன் அவரது நண்பர்கள் அம்பலவாணன் பேட்டையை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் அருண் ( 32 வயது) மேகராஜன் மகன் ராகுல் (31வயது) ஆகியோருடன்
த.பாளையம் கிராமத்தில் உள்ள முத்துலிங்கம் என்ற விவசாயி கிணற்றில் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி குணசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பொழுது அருகில் இருந்த விவசாயிகள் ராகுல், அருண் ஆகியோரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதில் அருண், ராகுல் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்டனர்.
உயிரிழந்த குணசீலனுக்கு திலகவதி 32; என்ற மனைவியும், அகத்தியன் என்ற எட்டு வயது மகனும் உள்ளனர்.
குணசீலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.