அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்!
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 24-ந் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.12695) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12624) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலமான கழக்கூட்டம், சிராயின்கீழ் மற்றும் கடகவூர் பகுதிகளில் ஒரு நிமிடம் நின்று வரும்.மேலும், கொல்லத்தில் இருந்து 25-ந் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (20636) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.இதேபோல, கொச்சுவேலியில் இருந்து வரும் 25-ந் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06429) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 3.40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.