புதன்கிழமை டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு நடக்கிறது!

தமிழ்நாடு வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் 84 உதவி வேளாண் அதிகாரி, 179 உதவி தோட்டக்கலை அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வு நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வில் 3 ஆயிரத்து 552 ஆண்கள், ஆயிரத்து 924 பெண்கள் என 5 ஆயிரத்து 476 பேர் பங்கேற்க உள்ளனர். சென்னை உள்பட 7 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதேபோல், பல்வேறு அரசு துறைகளில் நிதி நிர்வாக பிரிவில் 52 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஒருங்கிணைந்த கணக்கு சேவை தேர்வு இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை நடப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *