தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.டாக்டர் அன்புமணி இராமதாஸ்
சிவகங்கை மாவட்டம், அகிலாண்டபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு சிலர் தாறுமாறாக ஓட்டிய வாகனம் மோதி அப்பகுதியின் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதை கண்டித்து உயிரிழந்தவரின் உடலுடன் அப்பகுதி பெண்கள் நடத்திய போராட்டத்தில் சர்ச்சைக்குரிய மதுக்கடை சூறையாடப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் அனைத்து வகையான கேடுகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது. மதுக்கடைகள் மூடப்படாவிட்டால் இதே போன்ற நிகழ்வுகள் மேலும் பல இடங்களில் நடக்கக்கூடும். எனவே மக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை அரசு உடனடியாக மூடவேண்டும்.
அகிலாண்டபுரத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.25லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்
வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. மீனவர்கள் எல்லை தாண்டினால் கூட அவர்களைத் தாக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இல்லை. அத்தகைய சூழலில் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியதை இந்தியா வேடிக்கைப் பார்க்கக்கூடாது
தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என டாக்டர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்