பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டம்!
பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட் டத்தின் பதிவு தொடங்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் உள்ளிட்டவற்றில் அடிப்படை அறிவை ஏற்படுத்தும் வகையில், ‘யுவ விஞ்ஞானிகாயாக் கிராம்’ எனப்படும் இளம் விஞ்ஞானிகள் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானி களைத் தேர்வு செய்வதற்கான பதிவு பிப். 20- ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில், 9ஆம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்யலாம்.பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 20-ஆம் தேதி http:jigyasa.iirs.gov.in/registration ளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இரு வாரங்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பரிசோதனை விளக்கம், கேன்சாட், ரோபோடிக் கிட், இஸ்ரோவிஞ்ஞா னிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு இடம் பெற்றுள்ளன. மாணவர்களின் இருப்பிடஅடிப்படையில் 5 குழுக்களாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணி தம் ஆகியவற்றில் மாணவர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.