மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது
கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நெய்வேலி இந்து முன்னணி அமைப்பு சார்பில் வெற்றி விநாயகர் ஆலய வளாகத்தில் 13 அடி கொண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிறுவப்பட்டது ஐந்து நாள் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு இன்று விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி தொடங்கியது
முதலில் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் புறப்பட்டு மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள கடைத்தெரு மற்றும் பேருந்து நிலையம் வழியாக கொட்டு முரசு முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது பின்னர் மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு வெள்ளூர் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலய குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது ஊர்வலத்தின் போது வான வேடிக்கைகளும் கொட்டு முரசு முழங்க சிறுவர்கள் நடன ஆடி மகிழ்ந்தனர்
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு நெய்வேலி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் 200 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.