கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய வாரியாக உறுப்பினர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை ஒன்றிய செயலாளர் தொகுதி மற்றும் ஒன்றிய வாரியாக கூட்டத்தில் எடுத்துரைத்தனர் மேலும் நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மக்கள் நல திருவிழாவாக நடத்த வேண்டும்.கலைஞர் பிறந்த நாளாம் ஜூன் 3 அன்று வட சென்னையில் உலகே வியந்து பார்க்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.கலைஞர் பிறந்தநாள் அன்று அனைத்து ஊராட்சி ஒன்றிய நகர பகுதிகளில் உள்ள கழக கொடிக்கம்பங்களை புதுப்பிக்க வேண்டும் கலைஞர் அவர்களின் திருஉருவச் சிலையை உரிய அனுமதி பெற்று அனைத்து பகுதிகளிலும் நிறுவிட வேண்டும் .பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.பல்வேறு துறைகளை சார்ந்தவர்களை கொண்டு கருத்தரங்கம் பொதுக்கூட்டங்கள் தெருமுனைப் பிரச்சாரம் ஆகியவை நடத்த வேண்டும்.கணினி இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களை அனைத்து ஒன்றிய பகுதிகளில் தொடங்க வேண்டும்.புதிய உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும் இளைஞர்களுக்கு பல போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலைஞர் எழுதிய புத்தகங்களை பரிசாக்க வேண்டும்.ஆகிய 9 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்