வானதிரயன்பட்டிணம் ஊராட்சியில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா.
வானதிரயன்பட்டிணம் ஊராட்சியில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா.
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அடுத்து வானதிரயன் பட்டிணம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி உற்சவ திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் பிரபு, ஒன்றிய குழு உறுப்பினர் தன. அருள்தாஸ், கிராம நாட்டார்கள், வகையறா நாட்டார்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்ததின் பேரில் அவர்களது
தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 19 -ஆம் தேதி காப்பு கட்டுதலு டன் தொடங்கி திரௌபதி அம்மன், , தருமர், பீமன், அர்ஜுனர், நகுலர், சகாதேவர், கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மகாபாரத கதைகளும் தொடர்ந்து பாடப்பட்டு வந்ததைதொடர்ந்து அம்மன் பூங் கரகம், அக்னி கரகம் ஜோடித்து ஏந்தியவாறு பக்தர்கள் குமிளங்குழி ஏரி கரையில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் வளாகத்தை நெருங்கியதும் அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் அம்மன் பூங் கரகம்,அக்னி கரகம் ஏந்தியவாறு சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து வழிபட்டனர்.
இந்த விழாவில் வானதிரயன்பட்டிணம் ஊராட்சியை அடுத்து சிலால், தேவாமங்கலம், உதயநத்தம், நாயகனைபிரியாள, அங்கராயநல்லூர், உத்திரக்குடி, ஏந்தல்,இடையார் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனது அருள் ஆசி பெற்று சென்றனர்.
இதில் உடையார்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வேலுச்சாமி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வம், திருமதி சுமதி மற்றும் காவலர்கள், ஊர்க்காவல் படை காவலர்கள் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும்,பொது மக்களுக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், தீவிர கண்காணித்தும் மிக சிறப்பாக பாதுகாப்பு பணி வழங்கியுள்ளதால் காவலர்களுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளைகளையும் தெரிவித்தனர்.