உடையார்பாளையம் அருகே ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் திருச்சி ரோட்டுதெருவில் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீ இன்ப மாரியம்மன் ஆலயமானது சிறப்புற புனராவர்தனம் செய்யப்பட்டு அஸ்ட்பந்தன ஜீர்னோதாரன மாகா கும்பாவபிஷேக வைபவமானது.அதனை தொடர்ந்து 19.05.23 அன்று வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், கணபதி ஹோமம், வாஸ்து, சாந்தி, பிரவோசலபலி,அங்குரார்பணம்,ரக்ஷாபந்தனம் ஆகிய பூஜைகள் நடந்தது.பிறகு இரவு 8 மணியளவில் கலாதர்ஷணம், முதல் கால யாக பூஜை, திரவியாகுதி, பூரணா குதி தீபாராதனை ஆகிய பூஜைகள் நடந்தது.20.05.23 சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு மேல் மங்கல இசை, வேதபாராயணம், மூன்றாம் கால யாகசாலை பூஜை திரவியாகுதி,பூர்னா குதி தீபாரதனை நடந்தது.மாலை 6 மணிக்கு மேல் மங்கல இசை, வேதபாராயணம், மூன்றாம் காலை யாக சாலை, பூஜை, திரவியாகுதி, பூர்னாகுதி, தீபாராதனை நடந்தது.21.05.23 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு மேல் மங்கல இசை, வேதபாராயணம், நான்காம் காலை யாகசாலை பூஜை திரவியாகுதி, பூர்னாகுதி தீபாராதனை நடந்தது.மாலை 6 மணிக்கு மேல் ஐந்தாம் கால யாகசாலை பூஜை, திரவியாகுதி, பூர்னாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று 22.05.23 திங்கள் கிழமை அன்று காலை 8 மணிக்கு மேல் விஷேசசாந்தி, மங்கல இசை, வேதபாராயணம், கோபூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்தது.பிறகு 9 மணிக்கு மேல் நாடி சந்தானம் ஸ்பரிசாகுதி, தக்வார்ச்சனைகள், திரவியாகுதி நடந்து பின்னர் 10.30 மணிக்கு மேல் மஹாபூர்னாகுதி, மகா தீபாரதனை, கடம் புறப்பாடு நடந்து ஸ்ரீ இன்ப மாரியம்மனுக்கு புணித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.விழா ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் க.வெங்ட்ராமன், தர்மகர்த்தா சூரியநாராயண், நாட்டார்கள் இளங்கோவன், தர்மன், மற்றும் விழா திருப்பணி குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.