செந்துறை அருகே நத்தகுழி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
செந்துறை அருகே நத்தகுழி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தக்குழி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா மணப்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி அமீனா கணேசன் தலைமையில் விழா நடைப்பெற்றது.
மேலும் மணப்பத்தூர் ஊராட்சியில் உள்ள கிராமத்தில் வீடு தோறும் மரக்கன்றுகள் வழங்கவும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி நட்டு பராமரிக்கவும், ஊராட்சியில் உள்ள மணப்பத்தூர், சித்துடையார், சோழன்குடிக்காடு, படவெட்டிகுடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நத்தக்குழி கிராமத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதற்கட்டமாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான சமூக ஆர்வலர் சோழன்.குமார் வாண்டையார் தொடங்கி வைத்து மரக்கன்று நட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் மரக்கன்று நட்டு வைத்தனர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணிதல பொறுப்பாளர் தமயந்தி, வார்டு உறுப்பினர் கண்ணகி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்