டிஎன் 24 மீடியா அலைவரிசை நண்பர் நூ.சே.அம்சத் அஅவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம்

டிஎன் 24 மீடியா அலைவரிசை நண்பர் நூ.சே.அம்சத் அவர்கள் ரவுடிகளாள் தாக்கப்பட்டிருக்கிறார். தங்களுக்கு எதிரான கருத்துள்ளவர்களைத் மிரட்டுவது, தாக்குவது
அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் கொலையிலிருந்து மதுரை தினகரன் நாளிதழ் எரிப்புவரை இவர்களின் அட்டுழியம் தொடர்கதையாக உள்ளது.
இப்போது ஊழல், முறைகேடுகள், கனிமவளக் கொள்ளை ஆகியவற்றால் அம்பலப்பட்டுள்ள திமுக அவற்றைக் குறித்து பேசுவோரை இதுபோல தாக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஊடகங்கள் பெரும்பாலானவற்றை விலை கொடுத்து வாங்கிவிட்ட நிலையில் பணத்திற்கு விலைபோகாமல், எந்த அரசியல் கட்சியையும் சாராமல், தமிழ்த்தேசிய சிந்தனையை முன்கொண்டு செல்லும் டிஎன்24 மீடியா போன்ற ஊடகத்தினரை இதுபோன்ற தாக்குதல்கள் மூலமாக பணிய வைக்க முயல்கின்றனர் திமுக குண்டர்கள்.
மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை இலங்கையைப் போல மக்கள் எழுச்சிபெற்று அடித்து விரட்டும் காலம் தூரத்தில் இல்லை. ஆனாலும் இந்தத் தாக்குதலுக்கு எதிராக கருத்துரிமைக்குப் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள், தமிழ்க்குடிகள் அணி திரள வேண்டியது அவசியம்.
இன்றைக்கு அம்சத்திற்கு நேர்ந்த கொடுந்தாக்குதலுக்கு தண்டனை கிடைக்காமல் போகுமானால் இந்த மக்கள் விரோதிகளின் கொட்டம் அதிகரித்துவிடும். இவர்களை அம்பலப்படுத்தும் யாருக்கும் இது நாளை நேரலாம்.
எனவே இந்த மக்கள் விரோதிகளுக்கு எதிராக அணிதிரள்வோம்.
ஊடகவியலாளர் அம்சத்திற்கு நீதி கிடைக்கச்செய்வோம்!
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial