மது போதையில் வேகமாக வாகனத்தை ஓட்டி, போக்குவரத்துக் காவலர் களிடம், மல்லுகட்டிய ஹீரோக்கள்
விருத்தாசலம் கடைவீதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து காவலர்கள் வழக்கமாக தமது பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு இளைஞர்கள் மது போதையில் வேகமாக வாகனத்தை ஓட்டி வந்தனர் அவர்களை போக்குவரத்துக் காவலர் மறித்த போது திமிரிக்கொண்டு அவர்களிடத்தில் இருந்து தப்பித்து வந்தனர்
இருந்தாலும் காவலர்கள் கடமை உணர்ச்சியோடு தப்பித்து சென்ற இளைஞர்களை விரைந்து சென்று பாலக்கரை ரவுண்டானாவில் மடக்கி பிடித்தனர்
உடனே காவலர்களை மீண்டும் திமிறி கொண்டு தனது கையில் இருந்த பைகளை ரோட்டில் வீசி எல்லா வாகனத்தையும் பிடிக்காமல் என் வாகனத்தை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள் என்று அந்த இளைஞர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர் உடனே போக்குவரத்து காவலர்கள் ஆட்டோவை வரவழைத்து ஆட்டோவில் அவர்களை ஏற்ற முயன்றனர் மீண்டும் அவர்கள் திமிறி கொண்டு ரோட்டில் அலப்பறை செய்ததால் பாலக்கரையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டு இங்கு என்ன சூட்டிங் நடக்கிறதா என பொதுமக்கள் கூடி சுவாரசியமாக பார்த்து கொண்டு இருந்தனர் இதனால்போக்குவரத்து ஸ்தம்பித்தது உடனே போக்குவரத்து உதவி ஆய்வாளர் விறைந்து வந்து மற்ற கவலர்களுடன் சேர்ந்து அந்த இருவரையும் ஆட்டோவில் திணித்தனர் இவர்களை மீறி மீறி அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்டோவில் இருந்து குதிப்பதும் காவலர்கள் அவர்களை ஆட்டோக்குள் திணிப்பதுமாக இருந்ததை மக்கள் பார்த்து ரசித்தனர்.
நீண்ட நேரத்திற்கும் பிறகு ஒரு வழியாக காவலர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பிய பிறகுதான் காவலர்களுக்கு நிம்மதி வந்தது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
“செய்திகளுக்காக மலர்ததாசன்: