“50 வருடங்களுக்கு பிறகு” காவேரி வனத்துறை சரணாலயத்தில் புலிகள் தென்பட்டன!

காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டு புலிகள் தென்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள இரண்டு ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக்காப்பாளர் செல்வி. கார்த்திகாயினி தெரிவித்ததாக தலைமை வன உயிரினக்காப்பாளர் திரு. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024- இல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த இரண்டு புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது தெரிய வருகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகமானது, சமீபத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தையும் ஒட்டி அமைந்துள்ள தொடர் பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற தமிழ்நாடு அரசு வன உயிரினங்களைப் பாதுகாக்க எடுத்துவரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணமாகும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial