“காவி உடையில் திருவள்ளுவர்” சர்ச்சையில் கவர்னர்!
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தனது மனைவி லட்சுமியுடன் சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காவி உடை அணிந்த நிலையில் இருக்கும் திருவள்ளுவர் படத்துடன் சமூக வலைதளத்தில் கவர்னர் வாழ்த்து செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.