ரெயில் பெட்டியின் கழிவறையில் இறந்து கிடந்த பெண்; பயணிகள் அதிர்ச்சி!

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் பாலக்காட்டு மடம் பகுதியைச் சேர்ந்தவர் சுரஜாநாயர் (வயது 45). இவர் சாம்பல்போரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கேரளா செல்ல தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்தபோது கழிவறைக்கு சென்ற சுரஜா நாயர் திரும்பி வரவில்லை. பின்னர் அங்கு சென்று பார்த்தபோது அவர் பேச்சுமூச்சின்றி மயங்கி கிடந்தார். இதையடுத்து பரிசோதகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே டாக்டர்கள் வந்து பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *