“கருடனை எந்த கிழமையில் தரிசித்தால் என்ன பலன்கள் கிடைக்கும்”-கவலையின்றி வாழ கருட மந்திரம் உண்டு!

வாழ்க்கையில் செல்வம் பெருகி சந்தோஷமாக வாழ வேண்டும் என எண்ணி நாம் பெருமாள் கோவில்களுக்கு செல்வது வழக்கம். அப்படி பெருமாள் கோவில்களுக்கு செல்லும்போது கருடனை தரிசனம் செய்து செல்வோம். சிலர் கருடனை எதற்காக தரிசனம் செய்கிறோம் என்பது தெரியாமலேயே தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். பொதுவாக பெருமாள் கோவில்களில் உள்ள கருடனைத் தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள் அபாரமானது. முதலில் கருடசேவையைத் தரிசிப்பதன் மூலம் அக அழுக்குகளாகிய பாவம் போகும். ஜாதகத்தில் பல தடைகளை உண்டுபண்ணும், ராகு – கேது தோஷமாகிய நாக தோஷம் போகும். சுப காரியத்தடைகள் நீங்கும். தோல் வியாதிகள், நீண்ட நாள் வியாதிகள் குணமாகும். கருட பஞ்சமி நாளில் விரதமிருந்து கருடனைப் பூஜைசெய்ய, பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர்.

 

கருடனை தரிசனம் செய்யும்போது ஒவ்வொரு கிழமையிலும் கிடைக்கும் ஒவ்வொரு பலன்களையும் பின்வருவனவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்….

1. ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்.

2. திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.

3. செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.

4. புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

5. வியாழன் கருட தரிசனம் – சகல நன்மையை தரும்.

6. வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்.

7. சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.

கருடனை தரிசனம் செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூறி வேண்டும் போது நினைத்த காரியங்கள் நடக்கும்.

`ௐ தத்புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’ 

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *