ஜாதியும் மதமும், சமயமும் பொய் என தூக்கி எரிந்தவர் வள்ளலார்,திக வீரமணி பேச்சு.
ஜாதியும் மதமும், சமயமும் பொய் என தூக்கி எரிந்தவர் வள்ளலார்.
திக வீரமணி பேச்சு, கடலூர், மாவட்டம் , வடலூர் பேருந்து நிலையம் அருகே சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம் என்ற தலைப்பில் வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு, மாவட்ட கல்விக்குழுத்தலைவர் பொறியாளர் வி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.நகரமன்ற தலைவர் சிவக்குமார், திமுகநகர செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திராவிடர் கழகத்தின் பொது செயலாளர்,முனைவர் துரை சந்திரசேகரன், துவக்க உரையாற்றினார்,
தொடர்ந்து திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்கள்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞர் அருள்மொழி, விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட, தவாக ஒழுங்கு நடவடிக்கைக்குழு தி.திருமால்வளவன், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு டி.மணிவாசகம் மற்றும் சன்மார்க்கஅன்பர்கள் . .
திராவிடக் கழகத் தலைவர் கீவீரமணி பேசும்போது, தந்தைபெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், அங்கு சமூகநீதி கிடைக்கும் என எதிர்பார்த்தார், அங்கு கிடைக்காத காரணத்தால், சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார், அதுபோன்றுதான், வள்ளலார் கடவுள் மீது உள்ள ஈடுபாட்டால், முதல் ஐந்து திருமுறைகளை எழுதியவர், புதிய எழுச்சிபெற்று ஆறாம் திருமுறையில், பழைய கருத்துக்களை தூக்கி எரிந்தவர் புதிய கருத்துக்களை புதியதாக வெளியிட்டார். எழுதினார், வள்ளலார் 200 ஆண்டுகளுக்கு முன்பே பல புரட்சிகரமான கருத்துகளை கூறியவர் வள்ளலார், ஆர்சின் எண்ணம் பலிக்காது, வள்ளலாரின் கொள்கையை பாதுகாக்க நாம் கூடி இருக்கிறோம், கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போகவேண்டும் என்று மேன வள்ளலார் கூறினார். மதமும், சமயமும் பொய் என தூக்கி எரிந்தவர் வள்ளலார், இவ்வாறு வீரமணி பேசினார்,
விடுதலைசிறுத்தைகள்கட்சி தலைவர் “தொல்திருமாவளவன்”பேசுகையில், ஆர்என் ரவியை தமிழக ஆளுநராக நியமித்த போது, விசிக சார்பில் ஆபத்தானது என்று கூறினோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் தினம் தினம் புதிய சர்ச்சைகளை பேசுகிறார். அவர் ஆர் என் ரவி அல்ல, ஆர் எஸ் எஸ். அவர் பேசும்போது தமிழகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை வேண்டுமென்றே பேசி வருகிறார். திராவிடத்தையும் திராவிட இயக்க தலைவர்களையும் சீண்டி வருகிறார். அவர் ஆளுநர் கான மரபுகளை மீறி ஆர்எஸ்எஸ் தொண்டராகவே செயல்படுகிறார். பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளும் கட்சியினர் தயாரித்த கொடுப்பதையே ஆளுநர் சட்சபையில் வாசிக்க வேண்டும். ஆனால் ஆர்என் ரவி அவர்கள் திமுக அரசு அளித்த உரையில் சமத்துவம், சமூகநீதி உள்ளிட்டோர், பெயர்கள் பத்திகளை விட்டு,விட்டு படித்தார். அவர் சமூகநீதி சமத்துவம் பெண்ணுரிமை பெரியார் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க மறுத்துவிட்டார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த உரையில் இருக்கக்கூடிய அனைத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறும் என தெரிவித்தார். இந்த செயலை அடுத்து மரபுகளை மீறிஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.
திமுக எதிர்ப்பு என்ற பெயரில் பெரியார் இயக்கத்தை(கொள்கை) வீழ்த்த வேண்டும் என்று பேசி வருகிறார்.
வரலாற்றை திரித்து பேசுவது திரிபு வாதம் செய்வது அவரின் வாடிக்கை. அதன்படி தான் வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என பேசினார்.
சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் தான் என வரலாற்றைப் பிரித்துக் கூறுகின்றார்.
வள்ளலாரின் பின் பகுதி உருவ வழிபாடு கூடாது ஒளியில், அருவம் வழிபாடு செய்யலாம் என கூறியுள்ளார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என. அருள் என்றால் அன்பு கருணை,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர், மனித உயிரையும் கடந்து அன்பு செலுத்தி உள்ளார்.
ஜாதி மதம் சமய சடங்குகளை எதிர்த்தவர் வள்ளலார் அந்த வகையில் சனாதனத்தையும் எதிர்த்தவர் வள்ளலார் என்று அவர் பேசினார்.
|