வேலைக்கு சென்ற பெண்ணிடம் “தாலி சங்கிலி” பறிப்பு!
பெரம்பலூர் தீரன் நகர், வடக்கு தெருவை சோ்ந்தவர் நமச்சிவாயம் மனைவி நளினா (வயது 50). இவர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-கல்பாடி பிரிவு சாலையில் உள்ள தனியார் இனிப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நளினா வேலைக்கு செல்வதற்காக நிறுவனத்தின் பஸ்சுக்காக தீரன் நகரில் நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நளினா கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.