மத்திய அரசிடம் 6.25 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்கும்படி, தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை கூடுதல் கமிஷனர் வீணா தவானுக்கு, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகத்தில் 2021 ஜன., 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை, 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு 11.93 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
தற்போது தமிழகத்தில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர், முதல் தவணையையும்; 86 லட்சத்துக்கும் மேற்பட்டோர், இரண்டாம் தவணையையும்;
4.42 கோடி பேர், ஊக்கத் தவணையையும் செலுத்தாமல் உள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் எந்த தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை.
எனவே, காலாவதி காலம் அதிகம் உள்ள ஐந்து லட்சம், ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகளையும், 50 ஆயிரம் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிகளையும், 75 ஆயிரம் ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசிகளையும் விரைவாக வழங்கி, கொரோனா பரவலை தடுக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பதிலளிமுன்அனுப்பு
|