நுழைவு தேர்வால், அநீதிக்கு வழிவகுக்கும்,அநீதியாகவும் அமையும்,ஏழைமாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது
தேசியப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் முதன்மைத் துணைத் தலைவர், நாடாளுமன்ற மக்களவை மேலாளர் உறுப்பினர் டாக்டர் வெ. குழந்தைவேது அறிக்கை…
மாணவர்ச் சமுதாயத்திற்குப் பேரிடியாக…
எதிர் வரும் ஆண்டுமுதல் மருத்துவக்கல்லூரிகளில் எம். பி. பி. எஸ் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான மாணவர்கள் தேர்விற்கும், எம். டி., எம். எஸ் போன்ற பட்டமேற்படிப்பினை மேற்கொள்வதற்கான மாணவர்கள் தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு (Common Entrance Test CET) முறையே, டெல்லியிலமைந்த உயர் பள்ளிகளுக்கான மத்திய அமைப்பு (Central Board of Secondary Education CBSE) மற்றும் அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (All India Institute of Medical Sciences al AIIMS) வழிகாட்டுதலோடு நடத்தப்படுகிறது. மருத்துவக் குழாமின் (Medical Council of India MCI) முடிவாக வெளியாகி இருப்பது மக்கள் தொகையில் எண்பது சதவீதத்திற்கும் (80%) அதிகமாக இருக்கும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவச் சமூகத்திற்கு பேரிடியாக அமைந்தது சமுதாய சீரழிவிற்கும் வழிவகுக்கும்… அநீதியாகவும் அமையும்.
ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது..
ஏனெனில், தேசிய அளவில், அதுவும், அய்.சி. எஸ். சி, சி. பி. எஸ். சி கல்விப் பாடத் திட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்களால் மட்டுமே நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்:
வசதி வாய்ப்புகளற்ற கிராமப்புற மாணவர்களாலும் நகர்ப்புற ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.
மருத்துவக் குழாமின் தன்னிச்சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா… ?
இந்திய மருத்துவக் குழுவின் அறிவிப்பாகச் செய்தி வெளியாகி இருப்பது, இந்திய மருத்துவக் குழாமின் தன்னிச்சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா எனத் தெரியவில்லை.
ஏனெனில், இந்திய மருத்துவக் குழாமிற்கு தன்னிச்சையாகச் செயலாற்றக் கூடிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பொதுவான நுழைவுத் தேர்வினை எம். பி. பி. எஸ் பட்டப்படிப்பிற்கும், எம். டி., எம். எஸ் போன்ற பட்ட மேற்படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தான்தோன்றி தனமானது மட்டுமன்றி ஏழை எளிய மக்களுக்கு வாய்ப்புகள் கிட்டாமல் செய்வதற்கான சூழ்ச்சி வகைகளோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதமாக அமையும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணைபோகிறதா அல்லது ஆட்சி காட்டுகிறதா என்று தெரியவில்லை.
தாறுமாறானதும், ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தக் கூடியதுமான அய். சி. எஸ்.சி கல்வி, சி. பி. எஸ்.சி கல்வி, ஆங்கிலோ இந்தியன் கல்வி, ஓரியண்டல் கல்வி, மாநில மெட்ரிக் முறை கல்வி என்று மாறுபட்ட மாறுபட்ட முறைகளைக் களைந்து சமச்சீர் அளவிலான உயர்கல்வியை நாடு முழுவதும் அளிக்க வேண்டுமென்று கிராமப்புற மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்கிக் கிராமப்புற மாணவர்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பொதுவான நுழைவுத்தேர்வு என்கிற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது…
…தேசிய அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் குறி.பாக அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் தனியார் கூட்டமைப்புப் பள்ளிகளிலும் கிராமப்புற பள்ளிகளிலும் நகர்புற பள்ளிகளிலும் மாணவர்கள் உயர்தர பள்ளி அமைப்புகள், செம்மையான ஆசிரியர்கள், பயிற்சிக் கூடங்கள், இன்னபிற வசதிகளை உருவாக்கி ஒரே சீராகக் கல்வி மற்றும் தரமான சமச்சீர் கல்வியைத் தாய்மொழி மொழிகளிலும் ஆங்கிலத்திலும் ஒரே சீராக அளிக்கப்பட்டால் தான் அளவில் பொது நுழைவுத்தேர்வு பற்றி பரிசீலனை நடத்தலாம் அந்த நாள் வரை தேசிய அளவில் பொதுவான நுழைவுத்தேர்வு என்கிற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது.
ஒன்று திரண்டு தவிற வேறு வழி தெரியவில்லை….
அதற்குப் பாரதப் பிரதமர் மாண்புமிகு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய மருத்துவக்குழாம் மேற்கொள்ளப்படும் தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற முடிவினை விலக்கி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இல்லையேல் நாடு தழுவிய அளவில் ஏழை, எளிய மக்களும், மாணவர் சமுதாயமும், பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அந்தப் போராட்டத்தை ஒத்த மனமும், செயல்பாடுகளும் கொண்ட அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்பினர், மருத்துவர்கள் – மருத்துவத் துறையினர், ஆசிரியர் அமைப்புகள் – ஆசிரியர் கூட்டமைப்புகள், மாணவச் சமுதாயம், பொதுமக்கள் உள்ளிட்டோரை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில், தேசியப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு நடத்தினர். குறிப்பிட்ட அமைப்புகளும் தத்தமக்கே உரிய எழுச்சியோடும் வேகத்தோடும், முனைப்போடும் போராட்டங்களை ஒன்று பட்டு நடத்தி, உரிமைக்குப் போராடி, சமூக நீதி காத்து, சமுதாய நலன் காப்போம்.