என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு “பாஜக உத்தரவிட்டிருக்கலாம்” – “கெஜ்ரிவால் தாக்கு”

வருமான வரித்துறையில் நான் கமிஷனராகப் பணியாற்றியிருக்கிறேன். நான் நினைத்திருந்தால், கோடிக் கணக்கில் சம்பாதித்திருக்கலாம்.” – கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில், ஆளுங்கட்சிக்கும் துணை நிலை ஆளுநருக்குமான மோதலுக்கிடையில், மாநில மதுபானக் கொள்கை (கலால் கொள்கை) ஊழல் பிரச்னை எழுந்தது. இந்த விவகாரத்தில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைதுசெய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதேபோல இதற்கு முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது, மதுபானக் கொள்கை தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், `என்னைக் கைதுசெய்ய சி.பி.ஐ-க்கு பா.ஜ.க உத்தரவிட்டிருக்கலாம்’ என சி.பி.ஐ அலுவலகத்தில் இன்று ஆஜராவதற்கு முன்பு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், “நாம் எந்தத் தவறும் செய்யாத நிலையில், மறைப்பதற்கு என்ன இருக்கிறது… எல்லா கேள்விகளுக்கும் உண்மையாக பதில் சொல்கிறேன். அவர்கள் (பாஜக) மிகவும் அதிகாரமுடையவர்கள். குற்றவாளியா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், யாரை வேண்டுமானாலும் அவர்கள் சிறையிலடைக்கலாம். நேற்றுமுதல் அவர்கள் அனைவரும் `கெஜ்ரிவாலைக் கைதுசெய்வோம்’ எனக் கூறி வருகின்றனர். ஒருவேளை என்னைக் கைதுசெய்ய சி.பி.ஐ-க்கு பா.ஜ.க உத்தரவிட்டிருக்கலாம். அப்படி பா.ஜ.க உத்தரவிட்டிருந்தால், சி.பி.ஐ அதன்படிதான் நடக்கும் என்றார்.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *