நடுவலூர் துணை மின் நிலையத்தில் 110/33 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
தா.பழூர் அருகே நடுவலூர் துணை மின் நிலையத்தில் 110/33 கிலோ வோல்ட் துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் துவங்கி வைத்த பின் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே நடுவலூரில் 33/11 கி.வோ துணை மின் நிலையமாக இருந்து வந்தது இந்த நிலையில் 1×16 திறன் கொண்ட மின்மாற்றியுடன் 110/33 கி.வோ துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட துணைமின் நிலைய செயல்பாடுகளை நடுவலூர் துணை மின் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் (கிராமியம்) பாக்யராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்து கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் நடுவலூர் துணை மின் நிலையம் தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் நடுவலூர், காக்காபாளையம், சுத்தமல்லி, அணிகுறிச்சி, கோரைக்குழி, சுந்தரேசபுரம், நரியங்குழி கோட்டியால் உள்ளிட்ட 31 கிராம மக்கள் பயன்பெறுவார்கள் மேலும் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள் சிறப்படைய சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் செயற்பொறியாளட்ர் (பொது) சேகர், அரியலூர் கோட்ட செயற்பொறியாளர் அய்யனார், செயற்பொறியாளர் (மின் அளவு சோதனை) மேகலா, மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் எழிலரசன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணைத் தலைவர் அசோக், ஊராட்சி செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி பொறியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.