யாதும் ஊரே யாவரும் கேளிர்- திரைப்படம் ஓர் பார்வை
யாதும் ஊரே யாவரும் கேளிர்- திரைப்படம்
நாடற்ற மனிதர்களின் உள்ளக் குமுறல்களை உரக்கச் சொல்லும் திரைப்படம் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையின் ஊடே சொல்ல வந்திருக்கிறது அகதிகளுக்கான இந்திய சட்ட வரைமுறையையும் உயிர் பிழைக்க ஓடோடி வரும் தமிழினத்தை தமிழக காவல்துறை செய்யும் அநீதியையும் அயோக்கியத்தனத்தையும் அகதிகள் முகாமில் நடக்கின்ற கொடுமைகளையும் காரி உமிழ்ந்திருக்கிறது இத்திரைப்படம்
சிறை கம்பிகளின் நிழலில் பியோனா கற்றுக் கொள்வது போன்ற காட்சி அற்புதம் இரண்டு அகதிகளுக்கு குழந்தை பிறந்தால் குழந்தையும் இங்கு அகதி தான் இந்த வசனம் உள்ளத்தை கனக்கச் செய்கிறது தமிழின் மீதும் தமிழினத்தின் மீதும் அக்கரையுள்ளவர்கள் அவசியம் தியேட்டரில் பாருங்கள்