அரியலூர்- நடுவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மரிய சூசை கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் மரிய சூசை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதனை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் திருச்சி திண்டுக்கல் புதுக்கோட்டை கடலூர் மதுரை சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 650 மாடுகள் பங்கேற்றுள்ளன. மாடுகளை பிடிக்க 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் கட்டில், பீரோ , சைக்கிள், சேர், டேபிள், குவளை, குடம், தங்கநாணயம், டிவி, பண முடிச்சுகள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டது. இதில் பாதுகாப்பு பணிக்காக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.