உயர்ச்சிறை குறும்படம் வெளியீடு – ஊருக்கு ஒரு குடி நூலறிமுக நிகழ்வு.
செஞ்சியில் 25-04-2023 செவ்வாயன்று உயிர்ச் சிறை என்ற குறும்பட வெளியீடும், ஊருக்கு ஒரு குடி எனும் நூல் அறிமுகமும் நடைபெற்றது.
முனைவர் ஜாக்குலின், புதுயுகம் நடராஜன், துரும்பர் விடுதலை இயக்கத்தின் நிறுவுநர் அருள்வளன், மருந்துவர் வ.நா.தன்மானன் ஆகியோர் ஊருக்கு ஒரு குடி, நூலாசிரியர் ஜீலியஸ் அவர்களின் வாழ்வின் வலிகளைப் புரிந்து அவற்றை இனி வரும் காலங்களில் தடயமற்று செய்தல் வேண்டும் என்றனர். ஜுலியஸ் துரும்பர் பிரிவினரின் மீட்சிக்கான செயல்கள் செய்துவருவதை வரிசைப்படுத்தினார்.
உயிர்ச்சிறை குறும்படத்தின் வரலாற்றுத் தேவையை கலைக்குழுத் தோழர் குடந்தை ஆல்பர்ட் ஸ்டீபன் அவர்களும், தலைமையாசிரியர் சம்பத் அவர்களும் சிறப்பாக வெளிப்படுத்தினர்.தையூர் பாலமுருகன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து உதவினார். நிகழ்வில் வழக்குரைஞர் திருவண்ணாமலை கண்ணன், கீழ்பென்னாத்தூர் சுப்ரமணியன், ஆசிரியர் கோதண்டராமன், விழுப்புரம் சென்பகவள்ளி, துரை.திருநாவுக்கரசு, நா.இராசநாயகம், வையவன், கு.கோ.சாக்ரடீசு, கபிலன் , பச்சையப்பன், சோலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
தோழர்.மீ.அ, சக்திவேல் நன்றி கூறினார்.