கூட்ட நெரிசலை தவிர்க்க “சிறப்பு ரெயில்” இயக்கம்!
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி மற்றும் சென்னை சென்டிரல்-கோவை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.அதன்படி, கன்னியாகுமரியில் இருந்து இன்று (28-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) 29-ந்தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் வந்த டையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து 29-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்- (06042) அடுத்த நாள் இரவு 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.