“சனி பகவானின்” ஆதிக்கம் குறைய இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!
பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்…
1.வாரத்தை( நாள்)- (சனிக்கிழமை) சொல்லுவதால் ஆயுள் வளரும்.
2. திதியை-(தசமி),கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.
3. நட்சத்திரத்திரத்தை(ஸ்வாதி), உச்சரிப்பதால் பாவம் நீங்கும்.
4. யோகத்தை (திருதி), கூறுவதால் வியாதி குணமாகும்.
5. கரணத்தை ,(வணிசை கரணம் 12.18 PM வரை,பின்பு கரசை கரணம்), கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்
தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.
பஞ்சாங்கம்தினமும் பஞ்சாங்கம் படிப்பதினால் நமது கர்ம வினைகள் அனைத்தும் நீங்குகிறது. திருக்கணிதப்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதியே,சனிப்பெயர்ச்சி ஆகிவிட்டது. வாக்கியப்படி, 20-12-2023, மாலை,05.22-மணிக்கு மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சி ஆகி இருக்கிறார் சனிபகவான்,அவருடைய நட்சத்திரமான உத்திரட்டாதியில்.ஆதலால் அன்றே சென்று தான் வணங்கவேண்டயதில்லை.அனுஷம் நட்சத்திர நாளான, 08-01-2024 திங்கட்கிழமைக்கிழமை அன்று வரை வணங்கலாம். சனிப்பெயர்ச்சி கொண்டாடலாம். இந்த சிறப்பு மிக்க ஆலயம் கும்பகோணம்-குடவாசல், திருவாரூர் மார்க்கத்தில்,10 கி.மீ-ல் உள்ள திருநறையூர் எனும் நாச்சியார் கோவில்-கடைவீதிக்கு தெற்கே சற்று தொலைவில் உள்ளது ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத இராமநாத ஸ்வாமி ஆலயம். மாந்தி கோவில் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். இங்கு வேறெங்கும் காணமுடியாதபடி, சனிபகவான், தனது இரண்டு மனைவிகளான மந்தாதேவி இடப்புறமாகவும்,சேஷ்டாதேவி வலப்புறமாகவும், கீழ் வரிசையில் மாந்தி, குளிகன் ஆகிய இரண்டு மகன்களுடன், தசரத சக்கரவர்த்தி நின்ற நிலையில் வணங்கியபடி காட்சி தருகிறார் சனிபகவான். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி, கேது தசை முதல் புதன் தசை முடிய உள்ள 09-தசை, புத்தி நடப்பவர்கள், உத்திரட்டாதி, பூசம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27-நட்சத்திரக்காரர்கள், மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12-ராசி, லக்னக்காரர்கள் அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த ஆலயம் சென்று வருவது சிறப்பு. முக்கியமாக ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மேலே சொன்ன சனியின் பாதிப்பு இருந்தால், குடும்பத்துடன் சென்று வணங்க வேண்டும். இராமபிரான், இராவணன் வதம் முடிந்து அயோத்தி செல்லும் வழியில் இவ்வாலயம் சென்று வணங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.