சாட்டர்டே ஸ்பெஷல் “ராகி பணியாரம்”
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும்போது ஓய்வெடுத்த பிறகு இன்று என்ன சமைக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்கள் மிக எளிதில் சமைத்து சாப்பிடக்கூடிய வகையில் ராகி பணியாரம் குறித்து பார்ப்போம்….
தேவை:- ராகி மாவு – 1 கப், பச்சரிசி மாவு – கப் பால் -½கப்,நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தூள் ½கப்,சமையல் சோடா – சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:– ராகி மாவு, பச்சரிசி மாவு,நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தூள், காய்ச்சி ஆறிய பால் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். சமையல் சோடாவையும் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் அல்லது எண்ணெய் விடவும். காய்ந்ததும், சிறிய கரண்டியில் மாவை எடுத்து குழிகளில் விடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். சுவையான ராகி பணியாரம் ரெடி.