சமையல்: சுவையான பஞ்சாப் ஸ்பெஷல்!
தேவையான பொருட்கள்:
உலர் பழங்கள் ½கப்
பால் 4 லிட்டர்
நெய் 4 தேக்கரண்டி
படிகாரத்தூள் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ½ தேக்கரண்டி
சர்க்கரை – 300 கிராம்
குளுக்கோஸ் பவுடர் – 4 தேக்கரண்டி
தண்ணீர் 8 தேக்கரண்டி
செய்முறை: உலர் பழங்களை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அதில் படிகாரத்தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கலக்கவும். பால் பாதி அளவாக சுண்டி கெட்டியாகும்போது அதில் குளுக்கோசை போட்டு கலக்கவும். பின்னர் அதில் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் கலவை நிறம் மாறி திரள் திரளான பதத்துக்கு வரும். இப்போது அதில் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒருமுறை கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும். இதை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி சமமாக பரப்பவும். இதன் மேலே உலர் பழங்கள் தூவி அலங்கரிக்கவும். கலவை ஆறியதும் விருப்பமான வடிவங்களில் வெட்டி பரிமாறவும். இப்போது சுவையான பஞ்சாப் ஸ்பெஷல் தோகா ரெடி.