1.5 ஏக்கர் நிலத்தை அரசுப்பள்ளிக்கு வழங்கிய “பூரணம் அம்மாளுக்கு” அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி!
மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.” அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்அன்னயாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாளின் தொண்டு மகத்தானது என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாளை கௌரவிக்கப்பட உள்ளார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.