சாலிகிராமம் தட்டு இட்லி கடை
இன்று மதியம் ஒரு டப்பிங் வேலை முடிந்து எங்களது குழுவோடு வழக்கமாக சாப்பிடும் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தோம் அப்பொழுது அண்ணன் டெலிஃபோன் ராஜ் அவர்கள் வாங்களேன் காலையில் இந்த கடையில தான் தட்டு இட்லி சாப்பிட்டேன் நல்லா இருந்தது மதியம் இங்கேயே சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றார் நாங்கள் கடைக்கு சென்று 15 நிமிடம் வரை யாரும் எங்களை விசாரிக்கவும் இல்லை ஒன்றும் கேட்கவும் இல்லை நாங்களாக சர்வரை அழைத்து நான்கு சாப்பாடு வேண்டும் என்று சொல்ல அவரின் பார்வை இங்கு ஏன் சாப்பிட வந்தீர்கள் என்றது போல் இருந்தது சாப்பாடு கொண்டு வந்து வைத்தவர் ஒரு கிண்ணம் காலியாகவே இருந்தது ஏன் இந்தக் கிண்ணம் காலியாக இருக்கிறது என்று கேட்க அதில் ஸ்வீட் வரும் ஆனால் ஸ்வீட் இல்லை என்றார் எங்களோடு வந்தவர் சாம்பார் வேண்டும் என்று சொல்ல எவரும் கண்டு கொள்ளவே இல்லை எங்களுக்கு ஏன் இந்த கடைக்கு வந்தோம் என்பது போன்ற ஒரு உணர்வு அண்ணன் டெலிபோன் ராஜ் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார் அவரிடம் வடிவேலு தோசைக்கான பிரிபரேஷன் சொல்ல அனைத்தையும் கேட்டுவிட்டு அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று சொல்லி முடிப்பார் தூங்கிக் கொண்டிருந்த எங்களை எழுப்பி டிபன் கேட்டதற்காக ஐம்பது ரூபாய் பிள்ளை போடு என்று சொல்லுவார் அதுபோல இருந்தது அந்த கடையின் அனுபவம் சாலிகிராமம் தட்டு இட்லி கடை சாப்பிட மறந்தும் போயிடாதீங்க போனா உங்க அனுபவம் ரொம்பவும் மோசமா இருக்கும்