வடலூரில் மகளிர் சங்க ஒருங்கிணைப்பு கூட்டம்
வடலூரில் மகளிர் சங்க ஒருங்கிணைப்பு கூட்டம்
கடலூர், மாவட்டம்
அறிவியல் முல்லை மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் கருத்தாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் வடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தனகேசவமூர்த்தி தலைமை தாங்கினார்.
மகளிர் குழு தலைவர் தனலக்ஷ்மி, பொருளாளர் சிவபிரியா, துணை தலைவர்கள் கலைச்செல்வி, நளாயினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ஜெயபிரகதி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் அறிவியலும் சாதனைகளும்,சிக்கனமும் சேமிப்பும்,சுய உதவிக்குழுக்கள் தொழில்பயிற்சி,அடுத்த கட்டம்நகர்வு ஆகிய தலைப்புகளில் ரமேஷ்பாபு, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் தாமோதரன்,மாவட்ட தலைவர் அறிவழகன்,பால குருநாதன் ஆகியோர் கருத்துகளை வழங்கினர்கள்.
வடலூர்,சேத்தியாத்தோப்பு,கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் செயல்படும் குழுக்களை மாவட்ட முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் தேர்வு செய்யபட்ட குழு ஊக்குனர்களுக்கு ஒரு நாள் தொழில் பயிற்சி வடலூரில் வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் முன்னணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கபட்டது. ஒருங்கிணைப்பாளர் சத்யா நன்றி கூறினார்.