வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆடி மாத ஜோதி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆடி மாத ஜோதி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திர தினத்தில் ஆறு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிப்பது வழக்கம்
இந்நிலையில் இன்று ஆடி மாத பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தில் ஜோதி தரிசனம் நடைபெற்றது
முன்னதாக கல்பட் ஐயா சன்னதி, அணையா அடுப்பு, தெய்வ நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்
பின்னர் மாலை சுமார் 7:45 மணி அளவில் சத்திய ஞான சபை வளாகத்தில் ஆறு திரைகளை விளக்கி ஜோதி தரிசனம் காட்டுகிறது
இத்தனை பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் ஆன்மீக மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனத்தை கண்டு களித்தனர்
மேலும் வள்ளலார் தெய்வ நிலையை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
.