ஐநா தேர்தலில் ரஷ்யா தோல்வி
54 உறுப்பினர்களை கொண்ட ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பல்வேறு அமைப்புகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது.
இதில் 3 முக்கியமான அமைப்புகளில் ரஷ்யா தோல்வி அடைந்தது. பெண்கள் ஆணையம், யுனிசெப் நிர்வாக குழு, குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையம் ஆகியவற்றில் தோல்வி அடைந்தது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ஐநா, ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது