ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டையி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்-
தே.தனுஷ்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேற்கு மெயின் ரோடு செந்தில் முருகன் மாவட்ட பிரதிநிதி இல்லத்தில் ஸ்ரீமுஷ்ணம் கிழக்குஒன்றிய மறுமலர்ச்சி திமுக சார்பில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் தமிழர் விரோதபோக்கை கண்டித்து அவரை திரும்ப பெறவலியுறுத்தி குடியரசு தலைவருக்கு அனுப்ப கையெழுத்து இயக்கம் பாளையங்கோட்டை செந்தில் முருகன் மாவட்ட பிரதிநிதி இல்லத்தில் ஒன்றிய அவைத்தலைவர் புலவர் சிவசங்கரன் தலைமை ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்க மாவட்ட பிரதிநிதிகள் டீகடை செந்தில்குமார் மற்றும் செந்தில்முருகன் முன்னிலையில் ,புதிய கொடி கம்பத்தில் கழககொடி சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலையில் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினராக மீண்டும்தேர்ந்தெடுக்கப்பட்டுள் ள மாவட்ட கவுன்சிலர் எம் எஸ் கந்தசாமி கழக கொடி ஏற்றினார் அதனைத்தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் ஒன்றியகழக கிளைகழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்