பாழடைந்து கிடக்கும் தொழில் நிலையங்கள்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய ஈரோடு மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஆதிதிராவிட மக்களின் தொழில் மேம்பாட்டுக்காக ரூபாய் 16 கோடி திட்ட மதிப்பீட்டில் கடந்த 1998 -ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தொழில் நிலையங்கள் இன்று வரை பயனாளிகளை கண்டறிந்து வழங்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. அது குறித்து குழுவிற்கு பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அவ்வளாகத்தை நேரில் பார்வையிட்டு தாட்கோ மற்றும் துறை அதிகாரிகளுக்கு விரைவில் அவற்றை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.


