சோழன் மாதேவி, சாலை அகலப்படுத்தும் பணி , ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சோழன் மாதேவி, சாலை அகலப்படுத்தும் பணி ,
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்,தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,சோழன்மாதேவி ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில்,ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2023 -2024கீழ், அணைக்குடம் -சோழன்மாதேவி – கோடாலிகருப்பூர் சாலையில் (1/00 -4/00) வரை ஒரு வழித்தடத்திலிருந்து இரு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் கருணாநிதி,உதவி பொறியாளர் விக்னேஷ்,
பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் .அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை,ஒன்றிய அவைத்தலைவர் .சூசைராஜ்,பொருளாளர் .நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர் .சாமிதுரை, மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கார்த்திகைகுமரன், வெ.பாலசுப்ரமணியன், குணசீலன், எழிலரசி அர்ச்சுணன்,முனைவர் முருகானந்தம்,தங்கபிரகாசம் மற்றும் சாலை ஆய்வாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்
அரியலூர் மாவட்டம் செய்தியாளர் வேல்முருகன்